கரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் தொற்றுப் பரவலின் தாக்கம் வீரியமடைந்துள்ளது. அங்கு நாளொன்றுக்கு கரோனா பாதிப்பின் எண்ணிக்கை சுமார் 17 ஆயிரமாக உள்ளது. இது நாளுக்கு நாள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் கரோனா பரவலின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக டெல்லி காவல் துறை அங்கு வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று இரவு 10 மணிமுதல் திங்கள்கிழமை (ஏப்ரல் 19) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதற்காக டெல்லி காவல் துறை அனைத்துவித ஆயத்தங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும், அங்கு பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.