ETV Bharat / bharat

பிச்சை எடுங்கள் - ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் கடுப்பான நீதிமன்றம் - delhi covid situation

தேசிய தலைநகர் டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தொழிற்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதை மத்திய அரசு நிறுத்தவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Delhi HC directs Centre to stop supply of oxygen for industrial purposes
தொழில்துறை நோக்கங்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதை நிறுத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : Apr 22, 2021, 8:26 AM IST

டெல்லி: மேக்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான அவசர வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து மருத்துவமனையில் விநியோகிக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல பாதுகாப்பான வழிகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் எனக் கூறியுள்ளது.

அரசு ஏன் யதார்த்தை புரிந்துகொள்ளவில்லை? கள நிலவரத்தை ஏன் அரசு மறுக்கிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், எதையாவது செய்யுங்கள், பிச்சை எடுங்கள் ஆக்சிஜன் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கெஞ்சுங்கள், மக்கள் செத்துக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கமுடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இது உணர்ச்சிகரமான சூழல் எனத் தெரிவித்துள்ளது. மேலும், எஃகு தொழிற்சாலை, பெட்ரோலியம் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தொழில்நிறுவனங்கள் மருத்துவப் பயன்பாட்டுக்கு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அவசர வழக்கை தாக்கல் செய்த மனுதாரர், மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம், மத்திய, டெல்லி அரசுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க விடுத்த கோரிக்கையையும் சுட்டிக்காட்டினார்.

"மேக்ஸ் மருத்துவமனையில் தற்போது மூன்று மணிநேரத்திற்கு வழங்குவதற்கு மட்டுமே ஆக்சிஜன் இருக்கிறது. இந்த ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால், 262 கரோனா நோயாளிகள் உள்பட 400 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக மாறும். இதில், சில நோயாளிகள் வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்" என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: கரோனா: மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.