டெல்லி மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கீர்த்தி நகரில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. அதன் பேரில், 12 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க முயன்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் மேலும் தீ பரவாமலிருக்க அப்பகுதியிலிருந்த 50 குடிசைகள் அகற்றப்பட்டு, அதில் வசித்த 200 பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்தத் தீ விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை, பொருள் சேதங்கள்தான் ஏற்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியில் இருந்த பல சிலிண்டர்கள் வெடித்ததால் தீயை அணைக்க அதிக நேரமானதாகத் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.48 லட்சம் அபேஸ்: முன்னாள் வங்கி மேலாளர் கைது