ETV Bharat / bharat

காளி திரைப்பட சர்ச்சை... லீனா மணிமேகலைக்கு புதிய சம்மன்... - லீனா மணிமேகலை

காளி திரைப்படத்தின் போஸ்டர் சர்ச்சையை தொடர்ந்து, அதன் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு டெல்லி நீதிமன்றம் புதிய சம்மனை அனுப்பியுள்ளது.

லீனா மணிமேகலை
லீனா மணிமேகலை
author img

By

Published : Aug 30, 2022, 5:10 PM IST

டெல்லி: பிரபல ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேலையின் பல ஆவணப்படங்கள் பாலியல் மற்றும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வந்துள்ளன. அவரின் முக்கிய ஆவணப் படங்களான ‘மாடத்தி’, ‘செங்கல்’ ஆகிய படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டவை. மேலும் இவர் ஈழப்போராட்டங்கள் குறித்தும் சில ஆவணப்படங்களை பதிவு செய்துள்ளார்.

லீனா மணிமேகலை சில மாதங்களுக்கு முன், வெளியிட்ட 'காளி' என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில், காளி போன்று வேடமணிந்த பெண் வாயில் சிகரெட்டுடனும், கையில் LGBTQ+ கொடியான வானவில் நிறக்கொடியுடனும் நிற்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இது, இந்து மதக் கடவுளை அவமதிப்பதாகக் கூறி பெரும் சர்ச்சை எழுந்தது.

தொடர்ந்து, 'arrest leena manimekalai' என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டு சிலர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில், அவர் மீது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில், வழக்கறிஞர் ராஜ் கௌரவ் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்து தெய்வத்தை தவறாக சித்தரித்த ஆவணப்படத் தயாரிப்பாளருக்கு நிரந்தர மற்றும் கட்டாயத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த மனுவின் மீது உத்தரவிடுவதற்கு முன், லீனா மணிமேகலை தரப்பு வாதங்களைக் கேட்க வேண்டும் எனக் கூறி டெல்லி நீதிமன்றம் கடந்த ஆக. 6ஆம் தேதி அவருக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது. எனினும், நீதிபதி விடுமுறையில் இருந்ததால் இந்த மனு மீதான விசாரணை தள்ளிப்போனது. மேலும், மணிமேகலை மற்றும் காளி ஆவணப்படத் தயாரிப்பு நிறுவன தரப்பிலும் பதில் தரப்படவில்லை.

இந்நிலையில், கூடுதல் மூத்த சிவில் நீதிபதி அபிஷேக் குமார் புதிய சம்மன் ஒன்றை லீனா மணிமேகலை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப், மின்னஞ்சல் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புகள் மூலமும் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனு மீதான வாதங்களை, எதிர் தரப்பு நவம்பர் 1ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தற்கொலை, விபத்துகளால் உயிரிழப்பு... தமிழ்நாட்டிற்கு 2ஆம் இடம்... அதிரவைக்கும் புள்ளிவிவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.