ETV Bharat / bharat

Delhi air pollution: முழு லாக்டவுனுக்கு தயார் - நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு - Stubble burning

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு விசாரணையில் முழு லாக்டவுன் அமல்படுத்த தயார் என டெல்லி அரசு கூறியது. வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம் டெல்லியில் வீட்டிலிருந்து வேலை (Work From Home) என்ற நடைமுறையை சிறிது காலத்திற்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

lockdown
lockdown
author img

By

Published : Nov 15, 2021, 12:37 PM IST

Updated : Nov 15, 2021, 1:08 PM IST

டெல்லியில் காற்று மாசு விவகாரம்(Delhi air pollution) குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

தீபாவளிக்குப்பின் கடுமையான காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லி திணறிவருகிறது. தொடர்ந்து ஒரு வாரமாக காற்று மாசு பிரச்னை மிகமோசமான இருந்துவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் காற்று மாசு விவகாரத்தில் டெல்லி அரசும், மத்திய அரசும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நிலையை உணர்ந்து அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறுத்தியது.

முழு லாக்டவுனுக்குத் தயார்

நீதிமன்ற கேள்விக்கு பதிலளித்த டெல்லி ஆம் ஆத்மி அரசு(AAP government), தலைநகர் டெல்லியில் மாசு பிரச்னையை சீர் செய்ய முழு லாக்டவுன்(complete lockdown) அமல்படுத்த அரசு தயாராகவுள்ளது. ஆனால், அண்டை மாநிலங்களும் லாக்டவுன் நடவடிக்கையை மேற்கொண்டால்தான் இதற்கு உரியத் தீர்வு எட்டப்படும். டெல்லியில் மட்டும் லாக்டவுன் அமல்படுத்தினால் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

அதேவேளை லாக்டவுன் நடவடிக்கைக்கு மத்திய அரசோ, காற்று தர மேலாண்மை ஆணையமோ பரிந்துரை செய்தால் அதை செயல்படுத்த மாநில அரசு தயாராகவுள்ளது. இவ்வாறு டெல்லி அரசு கூறியது.

சாக்கு சொல்ல வேண்டாம்

இது தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய அரசு, நிலைமையை சீர் செய்ய குழு அமைக்க தயாராகவுள்ளோம். இது நல்ல பலனைத் தரும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தது. மேலும், வைக்கோல் எரிப்பதன்(Stubble burning) மூலம் 10 விழுக்காடு காற்று மாசுதான் ஏற்படுகிறது. சுமார் 74 விழுக்காடு காற்று மாசு தொழில்சாலைகள், வாகனங்கள் மூலமே ஏற்படுகிறது என நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், குழு அமைப்பது மட்டும் போதாது. உடனடி நடவடிக்கைகள் தேவை. டெல்லி அரசு சொல்லும் சாக்குகளை ஏற்க முடியாது. சாலையை சுத்தப்படுத்த எத்தனை இயந்திரங்களை டெல்லி அரசு வைத்துள்ளது. இதுபோன்று தணிக்கை எடுக்கும் நிலைக்கு நீதிமன்றத்தை தள்ள வேண்டாம் என்றது.

மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை(Work From Home) என்ற முறையை டெல்லியில் பின்பற்றுங்கள். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்துங்கள்.

விவசாயிகளை துன்புறுத்தாமல், வைக்கோல் எரிப்பதன் சிக்கல் தொடர்பாக அவர்களிடம் பேசி புரிய வையுங்கள். அடுத்த விசாரணை வரும் புதன்கிழமை நடைபெறும் எனக் கூறி உத்தரவிட்டது.

இதையும் படிங்க: சிபிஐ இயக்குநரின் பதவிக்காலம் நீட்டிப்பு!

Last Updated : Nov 15, 2021, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.