ETV Bharat / bharat

"வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை"

author img

By

Published : Jun 19, 2022, 9:17 PM IST

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடம் இல்லை என்று ராணுவ உயர் அலுவர்கள் தெரிவித்துள்ளனர்.

Agnipath

டெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், முப்படைகளின் உயர் அதிகாரிகள் இன்று (ஜூன் ) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, "அக்னிபாத் திட்டத்தில் முதற்கட்டமாக 46 ஆயிரம் பேர் சேர்க்கப்பட உள்ளனர். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் ராணுவத்தில் சேர்க்கப்படும் வீரர்கள் எண்ணிக்கை 90 ஆயிரம் முதல் ஒரு லட்சமாக அதிகரிக்கும். அக்னிவீரர்கள் பணியின்போது வீர மரணம் அடைந்தால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

தற்போது பணியில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் சியாச்சின் உள்ளிட்ட சலுகைகள், அக்னி வீரர்களுக்கும் வழங்கப்படும். இதில் அக்னி வீரர்களுக்கு எதிராக எந்தவித பாகுபாடும் இல்லை. இத்திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வீரர்கள் என்ன செய்வார்கள்? என்று அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், ஆண்டுதோறும் 17 ஆயிரத்து 600 ராணுவ வீரர்கள் பணிக்காலம் முடிவதற்கு முன்பே ஓய்வு பெறுகிறார்கள். அதுகுறித்து யாரும் இங்கு கேட்பது இல்லை.

இந்திய ராணுவத்தில் ஒழுக்கம்தான் அடித்தளம். வன்முறையில் ஈடுபடுவோருக்கு இங்கு இடம் இல்லை. அக்னிபாத் திட்டத்தில் சேர விரும்பும் ஒவ்வொருவரும், தாங்கள் எந்த வன்முறை, நாசவேலைகளிலும் ஈடுபடவில்லை என காவல்துறையிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அது இல்லாத யாரும் ராணுவத்தில் சேர முடியாது" என்று கூறினார்.

இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களின் முதற்கட்ட சேர்க்கைக்கான விண்ணப்பம் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என்றும், ஜூலை 24ஆம் தேதி முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு தொடங்கும் என்றும், இவர்களுக்கான பயிற்சி டிசம்பர் 30-க்குள் தொடங்கும் என்றும் ஏர் மார்ஷல் எஸ்.கே. ஜா கூறினார்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு போர் கப்பல்களிலும் பணி வழங்கப்படும். அக்னிபாத் திட்டத்தில் கடற்படையில் சேரும் முதல் பேட்ஜ் அக்னி வீரர்களுக்கு நவம்பர் 21ஆம் தேதி முதல், ஒடிஷாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா பயிற்சி மையத்தில் பயிற்சிகள் தொடங்கும். இரண்டாவது பேட்ஜ் சேர்க்கை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று என்றும் வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதி தெரிவித்தார்

இதையும் படிங்க:அக்னிபத் போராட்டம் - கண்காணிக்கப்படும் இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.