டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் வீரருமான் எம்.எஸ்.தோனி இம்மாதம் தொடக்கத்தில், முன்னாள் தொழில் கூட்டாளிகளான மிஹிர் திவாகர் மற்றும் அவரது மனைவி செளமியா தாஸ் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த புகாரில், மிஹிர் திவாகர் மற்றும் செளமியா தாஸ் ஆகியோரின் நிறுவனமான ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தோனி இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் கிரிக்கெட் அகாடமிகளை நிறுவுவதற்கு கைழுத்திட்டுள்ளார்.
அதில் தான் சுமார் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து தோனியின் முன்னாள் கூட்டாளிகள் அவருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். தங்கள் மீது வழக்குபதிவு செய்ய நிரந்தர தடை கோரியும், தங்களுக்கு எதிராக அவதூறு மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை வெளியிட தடை விதிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தை அனுகினர்.
தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இதனால் தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை தடுக்கப்ப்ட வேண்டும் என தோனிக்கு எதிரான வழக்கில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி பிரதிபா எம் சிங்கின் கீழ் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதலில் வழக்கு சுமத்தப்பட்டவருக்கு இது குறித்து அறிவிப்பது பொருத்தமனதாக கருதப்படுகிறது. தொலைபேசி மூலம் மற்றும் அவரது மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் அளிப்பதோடு அவரை பிரநிதிதுவப்படுத்தும் சட்ட நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், ஒரு வாரத்திற்குள் நீதிமன்ற கட்டணத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களிடம் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சூப்பர்மேனாக மாறிய விராட் கோலி.. ஆட்டத்தையே மாற்றிய அந்த தருணம்! வைரலாகும் வீடியோ!