இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அனைத்து கோப்புகளையும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

சுதந்திரத்திற்குப் பிறகு நேதாஜிக்கு நம் நாடு உரிய மாண்பை அளிக்கும் வகையில் எதையும் செய்யவில்லை என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதியை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அதுவே எனது கோரிக்கை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி மாநிலத்தின் 'தேஷ் நாயக் திவாஸ்' என அனுசரிக்கப்படும் ” என குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு 2015 செப்டம்பர் 17ஆம் தேதியன்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திவாஹா ஃபாசலுக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணை ரத்து!