மத்தியப்பிரதேசம் : மத்தியப்பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை 124 ஆக இருந்தது. அதேநேரம் பாந்தவ்கர் தேசியப் பூங்கா வன விலங்குகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றியது. இதன் காரணமாக அம்மாநிலம் புலி மாநில அந்தஸ்தை பெற்றது.
ஆனால், கடந்த ஆறு மாதங்களில் 27 புலிகள் உயிரிழந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள், பாந்தவ்கரில் மூன்று புலிகளும் மூன்று புலிக்குட்டிகளும் கொல்லப்பட்டன. மேலும் ஐந்து ஆண்டுகளில் 10 க்கும் மேற்பட்ட புலிகள் வேட்டையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத மாநிலத்தில், வன விலங்குகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை கேள்விக் குறியாக்கியுள்ளது. இருப்பினும், மத்தியப்பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, “மாநிலத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, புலிகளின் உயிரிழப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
ஜூலை, 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புலிகள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை 2018 ன் படி, மத்தியப்பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. முன்னதாக கர்நாடகா மாநிலம், புலி மாநில அந்தஸ்தை பெற்று வந்தது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புலிகள் காப்பகப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயற்சி செய்த 5 பேர் கைது!