ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பாங்கரா கிராமத்தில் டிசம்பர் 8ஆம் தேதி திருமண விழாவின் போது எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிந்தனர். 52 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் அடுத்தடுத்து உரிழந்ததால், கடந்த சில நாட்களுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 16) 32 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே உரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். முன்னதாக, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு