கர்நாடகா மாநிலம் காமாக்ஷிபால்யா காவல்நிலையத்தின் முன்பிருக்கும் ஹெச்.பி. மண்டபத்தின் கழிவுநீர் தொட்டி வடிகால் வெகுநாள்களாகப் பயன்பாட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் அதனைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதில் உருக்குலைந்த சடலம் தென்படவே, காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அது பெண் ஒருவரின் சடலம் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வடிகாலுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதுவரை, உயிரிழந்த பெண்ணின் விவரங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போன நபர்கள் குறித்த புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:தெலங்கானா கார் விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!