2020ஆம் ஆண்டில் பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் மற்றும் ஆகில இந்திய வானொலியின் செயல்பாடு குறித்த புள்ளிவிரவம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், 2020ஆம் ஆண்டில் பிரசார் பாரதி டிஜிட்டல் தளத்தில் 100 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது எனவும் சுமார் 100 கோடி பார்வையாளர்கள் 600 கோடி நிமிடங்கள் பார்த்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுவாரஸ்சியமான அம்சம் என்னவென்றால், இந்தியாவுக்கு அடுத்தபடியாக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியை அதிகம் ரசித்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். கடந்த ஆண்டில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் மக்கள் பெரிதும் விரும்பி பார்த்துள்ளனர்.‘
பிரசார் பாரதியின் நியூஸ் ஆன் ஏர் செயலியை 25 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர் எனவும் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்வுதான் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கான ஆதரவு யூட்யூப் மற்றும் ட்விட்டரில் பெருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அரசியலில் சேர கங்குலிக்கு நெருக்கடி'- சிபிஐ"