ETV Bharat / bharat

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கும் மம்தா!

மார்ச் 10ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மம்தா சில நபர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தான் காரில் ஏற முயன்றபோது சுமார் ஐந்து பேர் தன்னைக் கீழே தள்ளியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மம்தா
மம்தா
author img

By

Published : Mar 14, 2021, 10:53 AM IST

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது காயமுற்று ஓய்வில் இருந்து வரும் மம்தா, இன்று (மார்ச்.14) காந்தி மூர்த்தி முதல் ஹஸ்ரா வரை சக்கர நாற்காலியில் அமர்ந்தவாரே தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, முன்னதாக நந்திகிராம், ரேயேபாரா தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது சிலரால் கீழே தள்ளப்பட்டதாகக் கூறி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தான் காரில் ஏற முயன்றபோது, சுமார் ஐந்து பேர் தன்னைக் கீழே தள்ளியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், 'இது திட்டமிட்ட செயலா' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இது சதிச் செயல்தான். சம்பவம் நடைபெற்றபோது, என்னைச் சுற்றி காவலர்களே இல்லை" என்றும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நந்திகிராமில் இருந்து சாலை வழியாக கொல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு மம்தா அழைத்து செல்லப்பட்டு சிக்கிகசைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மம்தாவின் இடது காலின் பாதம், மூட்டு பலமாக காயமடைந்துள்ளது என்றும் முன் கை, தோல்பட்டை, கழுத்து ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மார்ச் 12ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவர் அழைத்து வரப்பட்ட நிலையில், தற்போது முழு ஓய்வில் அவர் இருந்து வருகிறார். மம்தா சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், ஒரு வாரம் கழித்து அவர் மீண்டும் மருத்துவமனை வந்து பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் முன்னதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மம்தா நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, தேர்தலில் தங்கள் கட்சியின் நிலையை உணர்ந்ததால் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்கிறார் என்றும் சாடியுள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ்-இடதுசாரிக் கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டியை மேற்கு வங்கம் எதிர்கொள்ள உள்ளது. 294 சட்டப்பேரவைத் தொகுதிளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் யஷ்வந்த் சின்ஹா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.