உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிஜேஷ் பிரதாப் சிங். இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவர் நேற்று(ஏப்.28) முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மகன் இல்லாத காரணத்தால், மகள்கள் மூன்று பேரும் இறுதி சடங்குகளைச் செய்ய உறவினர்களை அழைத்தனர்.
கரோனா தொற்றால் உயிரிழந்ததால், உறவினர்கள் உதவ மறுத்தனர். இதைத்தொடர்ந்து தந்தையின் இறுதிச் சடங்குகளைத் தாங்களே செய்ய முடிவு செய்தனர். அதன்படி, மகள்கள் மூவரும், தந்தையின் உடலை தகன மேடை வரை தங்கள் தோளில் சுமந்து சென்றனர். பின்னர் அங்கு செய்ய வேண்டிய சடங்குகளையும் அவர்களே செய்து உடலையும் தகனம் செய்தனர்.
தந்தையின் உடலை அடக்கம் செய்ய யாரும் வராததால், தோளில் சுமந்து தந்தையின் உடலை அடக்கம் செய்த நிகழ்வு, கரோனா தொற்றின் குரூர முகத்தை காட்டுவதாக அமைந்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திண்டுக்கலில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு!