ETV Bharat / bharat

Sidhi Urination Case: வீடியோவில் இருக்கும் நபர் நான் இல்லை... திடீர் ட்விஸ்ட்... முதலமைச்சர் யார் கால்களை கழுவினார்? - பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி சிறுநீர்

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக வீடியோவில் உள்ள நபர் தான் இல்லை என்று மத்திய பிரதேச முதலமைச்சரால் கவுரவிக்கப்பட்ட நபர் கூறி இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Sidhi
Sidhi
author img

By

Published : Jul 10, 2023, 4:34 PM IST

போபால் : மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தில், வீடியோவில் இருந்த தஸ்வத் ராவத் என்ற இளைஞரை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அழைத்து மரியாதை செய்த நிலையில், திடீர் திருப்பமாக அந்த வீடியோவில் இருக்கும் நபர் தான் இல்லை என தஸ்வத் ராவத் கூறியதாக தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாஜக பிரமூகர் பர்வேஷ் சுக்லாவை வன்கொடுமை தடுப்பு மற்றும் எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீடியோவில் இருந்த பழங்குடியின இளைஞர் தஸ்வத் ராவத் என்பவரை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அழைத்து, அவரது பாதங்களை கழுவி நலம் விசாரித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த வீடியோவில் இருக்கும் நபர், தான் இல்லை என தஸ்வத் ராவத் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பேசிய தஸ்வத் ராவத், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட வீடியோவில் இருக்கும் நபர் தான் இல்லை என்றும், இதற்கு முன் பாஜக பிரமுகர் பர்வேஷ் சுக்லாவை பார்த்தது கூட இல்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உண்மையாக பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலாக வேறொருவரின் பாதங்களை கழுவி உள்ளதாக மாநில காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.

அதேபோல் முன்னாள் அமைச்சரும், பாஜக தலைவருமான குசும் சிங் மஹ்தேலே, தன் ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் பெயரை குறிப்பிடாமல், கால்களை கழுவும் செயல் ஒரு வித்தை என்று பதிவிட்டு உள்ளார். அதேநேரம் சிறுது நேரத்தில் அந்த ட்வீட்டர் பதிவு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பர்வேஷ் சுக்லாவை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி தஸ்மத் ராவத் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் செய்த தவறை உணர்ந்து விட்டதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் எஸ்.சி. எஸ்.டி பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பர்வேஷ் சுக்லா, ரேவா மாவட்ட நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டு உள்ளார்.

மாநில நிர்வாகம் பர்வேஷ் சுக்லா வீட்டின் ஒரு பகுதியை இடித்து தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது. பர்வேஷ் சுக்லாவுக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவியும், வீட்டை சீரமைக்க ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாயும் வழங்க மாநில அரசு அனுமதித்து உள்ளது.

இதையும் படிங்க : Falaknuma train : தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மக்களை காத்த இளைஞர்... இளைஞரின் துரதிர்ஷ்டம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.