மேஷம்
இன்றைய தினத்தை பொருத்தவரை, ஒரு சாதகமான நாளாகவே இருக்கும். உங்களிடம் இருப்பதை பற்றி நினைத்து நீங்கள் திருப்தியாக இருப்பீர்கள். அது தவிர, நீங்கள் செய்ய விரும்பும் ஒரு விஷயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பீர்கள். காதல் உறவுடன் செலவிடும் நேரம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், அது சச்சரவுகளை ஏற்படுத்தலாம். அது குறித்து நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
ரிஷபம்
இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, குதூகலமாகவும் அமைதியாகவும் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளது. மாலைப் பொழுதில், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் குதூகலமாக நேரத்தை கழிக்கலாம். அல்லது இரவு உணவிற்காகவோ அல்லது திரைப்படம் பார்க்கவோ குடும்பத்தினருடன் செல்லக்கூடும். சூடான, சுவையான உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகம் இருக்கும். இன்றைய பொழுதில் குதூகலமாக நீங்கள் கழிக்கலாம்.
மிதுனம்
இன்று முழுவதும், உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். உங்கள் ஆற்றலையும் ஆர்வத்தையும் எப்படி சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து நீங்கள் யோசிப்பீர்கள். மன நிலையிலும் பெரும் மாற்றங்கள் இருக்கும், தியான பயிற்சிகள் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம்.
கடகம்
உணர்வு ரீதியான விஷயங்களால், உங்கள் வெற்றிப் பாதையில் தடைகள் ஏற்படும். உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். இது வருங்காலத்தை பாதிக்கும். உங்களுடைய திறமையான பேச்சு மற்றும் பணிவான அணுகுமுறையால், மக்களின் மனதை கவர்வீர்கள்.
சிம்மம்
உங்களுக்கு இருக்கும் அதிக தன்னம்பிக்கையின் காரணமாக, சிக்கலான விஷயங்களை தைரியமாக மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் தங்கள் துறையில், மேம்பாடு அடைவார்கள். முழு திறமையை பயன்படுத்தி, உங்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்குவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாள் தான் என்றாலும், உங்கள் அனுமானங்களை கட்டுப்படுத்தவும்.
கன்னி
நீங்கள் இன்று அதிக புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களது திறமை மற்றும் ஆற்றல் காரணமாக சிறந்த கலைஞராக திகழ்வீர்கள். கற்பனைத் திறன் அதிகம் இருக்கும் காரணத்தால் உங்கள் செயல்திறன் அதிகம் இருக்கும். ஆடல் மற்றும் பாடல் கலையை தேர்ந்தெடுத்தால் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். நாடக கலை மற்றும் எழுத்துத் துறையில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்.
துலாம்
உங்கள் மனதில் ஒளிந்திருக்கும் கலைஞர் இன்று வெளிப்படுவார். உங்கள் கற்பனை திறன்களையும் நீங்கள் வெளிக்காட்டுவீர்கள். இன்று, நீங்கள் ஆர்வமாக உள்ள விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆர்வமாக உள்ள துறையில், நீங்கள் மேம்படுவீர்கள். இன்று உங்களுக்கு ஆதாயமாக உள்ள சட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இன்றைய தினம் ஒரு நல்ல வெற்றிகரமான நாளாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று, நீங்கள் ஆகாயத்தில் கோட்டை கட்டும் மனநிலையில் இருப்பீர்கள். ஏக்கமான மற்றும் வருத்தமான சிந்தனைகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், விரைவில் கைவிட்டு போன எதுவும் திரும்ப வராது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடக்கி முன்னேறி செல்வீர்கள்.
தனுசு
இன்று இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள்: கெட்ட நேரங்கள் அதிக நாட்களுக்கு நீடிப்பதில்லை; உறுதியான மனிதர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். ஆனால் கடுமையான சூழ்நிலைகளைக் கடந்து, பிரச்சனைகளை மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உள்ளது. உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் கொடுக்கும் அறிவுரைகளை பின்பற்றவும்.
மகரம்
உங்களது காதலர் மூலம், இன்ப அதிர்ச்சிகள் இன்று ஏற்படும். நீங்கள் இன்று,காதல் துணை மீதான காதல் காரணமாக, அவரது ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இருவரும் கடைகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதன் காரணமாக அதிக செலவுகள் ஏற்படலாம். உங்கள் காதலியின் விருப்பத்தை நிறைவேற்றி அவரை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். ஆனால் நாளின் இறுதியில், அதிக செலவின் காரணமாக, சிறிது மனம் வருந்துவீர்கள்.
கும்பம்
இன்று நீங்கள் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் பயணத்தை தனியாக மேற்கொள்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் அழைத்துச் சென்றால், அவர்களது விருப்பமும் உங்களது விருப்பமும் வெவ்வேறாக இருந்து பயணம் மகிழ்ச்சி இல்லாமல் போகக் கூடும். எனினும், அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், சமரசம் செய்துகொண்டு, மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யவும். உங்களது பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்ளும் உங்கள் திறமை, உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மீனம்
அலட்சியமான போக்கு, வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக உள்ளது. இன்றைய தினத்தில், நீங்கள் பணியிடத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் பொறுப்புணர்ச்சியுடன் கவனமாக மேற்கொள்ளவும். எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரப்போகும் பிரச்னைகளை தவிர்க்கலாம். நெடுநாட்களாக, நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்கள் மற்றும் பிற செயல்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதற்கான பலன்களும் கிடைக்கத் தொடங்கும்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் - யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்?