டெல்லி: ஒடிசா மாநிலத்தில் 'யாஸ்' புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார். முதலில், காலை 10:30 மணிக்கு புவனேஷ்வரின் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்.
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட பாலசோர், பத்ரக் ஆகிய பகுதிகளைப் பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பை குறித்து நேரில் சென்று கேட்டறிகிறார்.