ETV Bharat / bharat

தமிழகத்திற்கு காவிரியில் 2600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு! - காவிரி நீர்

Cauvery water management authority: கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு 89வது கூட்டத்தின் பரிந்துரையை ஏற்றுக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 2600 கன அடி தண்ணீரைக் காவிரியிலிருந்து கர்நாடக அரசு நவம்பர் 23ஆம் தேதி வரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

cwma-orders-to-release-2600-cubic-feet-of-water-from-karnataka-cauvery-to-tamil-nadu
காவிரி நீர் மேலாண்மை ஆணையம்: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 4:26 PM IST

Updated : Nov 3, 2023, 7:04 PM IST

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

அப்போது, தமிழ்நாட்டிற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 2600 கன அடி தண்ணீரைக் கர்நாடக அரசு காவிரி பில்லிக்குண்டு வழியாகத் திறந்து விட வேண்டும் எனக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்ததது.

ஆனால், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்து. மேலும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையானது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27வது கூட்டம் டெல்லியில் இன்று (நவ.3) நடைபெற்றது.

தமிழ்நாடு தரப்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27வது கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்குக் காவிரி பில்லிக்குண்டு வழியாக நவம்பர் 23ஆம் தேதி வரை 2600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசிற்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!

Last Updated : Nov 3, 2023, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.