ஹைதராபாத்: பிரான்ஸ் நாட்டின் நான்டர்ரே புறநகர்ப் பகுதியில், 17 வயது சிறுவன் காவல்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு, எதிர்ப்புத் தெரிவித்து, நடைபெற்று வரும் கலவரம் 4வது நாளை எட்டி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸில் நடந்து வரும் கலவரத்தைத் தடுக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலையிட வேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் செய்த ட்வீட், பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, முதலமைச்சர் அலுவலகம், விசாரணை மேற்கொண்டது. சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பி உள்ள, இந்தப் பதிவரின் ட்வீட், பகடி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
"Prof.N John Camm" என்ற பெயரிலான சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, பிரான்ஸுக்கு அனுப்புமாறு இந்தியாவைக் கேட்டுக் கொண்டது. அவர் 24 மணி நேரத்திற்குள் அமைதியின்மையிலிருந்து விடுபட செய்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. "இந்தியா @myogiadityanath-ஐ பிரான்ஸுக்கு அனுப்ப வேண்டும். அங்குள்ள கலவர சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, அவர் 24 மணி நேரத்திற்குள் செய்வார்" என்று ட்விட்டர் , பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
-
India must send @myogiadityanath to France to control riot situation there and My God,he will do it within 24 hours.
— Prof.N John Camm (@njohncamm) June 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India must send @myogiadityanath to France to control riot situation there and My God,he will do it within 24 hours.
— Prof.N John Camm (@njohncamm) June 30, 2023India must send @myogiadityanath to France to control riot situation there and My God,he will do it within 24 hours.
— Prof.N John Camm (@njohncamm) June 30, 2023
இந்த ட்விட்டர் குறித்து ஆய்வு மேற்கொண்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகம், "ஆட்சியின் மாதிரியை" வெகுவாகப் பாராட்டியுள்ளது. "உலகின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் கலவரங்கள், குழப்பங்கள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகளைத் தூண்டும் போதெல்லாம், உலகம் ஆறுதல் தேடுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளதைப் போன்று "யோகி மாதிரி" மாற்றத்திற்காக உலகம் ஏங்குவதாக'' அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
Whenever extremism fuels riots, chaos engulfs and law & order situation arises in any part of the globe, the World seeks solace and yearns for the transformative "Yogi Model" of Law & Order established by Maharaj Ji in Uttar Pradesh. https://t.co/xyFxd1YBpi
— Yogi Adityanath Office (@myogioffice) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Whenever extremism fuels riots, chaos engulfs and law & order situation arises in any part of the globe, the World seeks solace and yearns for the transformative "Yogi Model" of Law & Order established by Maharaj Ji in Uttar Pradesh. https://t.co/xyFxd1YBpi
— Yogi Adityanath Office (@myogioffice) July 1, 2023Whenever extremism fuels riots, chaos engulfs and law & order situation arises in any part of the globe, the World seeks solace and yearns for the transformative "Yogi Model" of Law & Order established by Maharaj Ji in Uttar Pradesh. https://t.co/xyFxd1YBpi
— Yogi Adityanath Office (@myogioffice) July 1, 2023
பயனருக்குப் பதிலளிக்கும் போது, யோகியின் அலுவலகம் உ.பி. முதலமைச்சரின் "ஆட்சியின் மாதிரியை" பாராட்டியது. மேலும் ட்வீட்டை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் அலுவலகம் எழுதியது, "உலகின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதம், கலவரங்கள், குழப்பங்கள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகள் நிகழும் போதெல்லாம், உலகம் ஆறுதல் தேடுகிறது மற்றும் "யோகி மாதிரி" மாற்றத்திற்காக ஏங்குகிறது.
"Prof.N John Camm" என்ற பெயரிலான ட்விட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்ட போதிலும், இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பல ட்விட்டர் பயனர்கள், "Prof.N John Camm" பெயரிடப்பட்ட கணக்கு உண்மையில் போலியானது என்று குறிப்பிட்டு உள்ள நிலையில், இந்த ட்விட்டர் கணக்கை இயக்குபவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்று தெரிவித்து உள்ளனர்.
-
भाई, भाई, भाई! फिरंगियों की तारीफ़ के इतने भूके हैं की किसी फर्जी अकाउंट के ट्वीट से खुश हो रहे हैं?! झूठे एनकाउंटर, ग़ैर-क़ानूनी बुलडोज़र कार्यवाही और कमज़ोरों को निशाना बनाना कोई परिवर्तनकारी नीति नहीं है, ये जम्हूरियत का विनाश है। “योगी माडल” का सच तो हमने लखीमपुर खीरी और… https://t.co/UV0S3jcWrB
— Asaduddin Owaisi (@asadowaisi) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">भाई, भाई, भाई! फिरंगियों की तारीफ़ के इतने भूके हैं की किसी फर्जी अकाउंट के ट्वीट से खुश हो रहे हैं?! झूठे एनकाउंटर, ग़ैर-क़ानूनी बुलडोज़र कार्यवाही और कमज़ोरों को निशाना बनाना कोई परिवर्तनकारी नीति नहीं है, ये जम्हूरियत का विनाश है। “योगी माडल” का सच तो हमने लखीमपुर खीरी और… https://t.co/UV0S3jcWrB
— Asaduddin Owaisi (@asadowaisi) July 1, 2023भाई, भाई, भाई! फिरंगियों की तारीफ़ के इतने भूके हैं की किसी फर्जी अकाउंट के ट्वीट से खुश हो रहे हैं?! झूठे एनकाउंटर, ग़ैर-क़ानूनी बुलडोज़र कार्यवाही और कमज़ोरों को निशाना बनाना कोई परिवर्तनकारी नीति नहीं है, ये जम्हूरियत का विनाश है। “योगी माडल” का सच तो हमने लखीमपुर खीरी और… https://t.co/UV0S3jcWrB
— Asaduddin Owaisi (@asadowaisi) July 1, 2023
ட்விட்டர் பயனர்கள் சிலர், உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் உள்ள ஒரு நபரின் புகைப்படத்தையும் பகிர்ந்து, அவர்தான் இந்த நபர் என்று குறிப்பிட்டு உள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவெனில், கடந்த மார்ச் மாதத்தில், ட்விட்டர் பயனர் ஒருவர் கணக்கு சரிபார்ப்பை, அவரின் முக்கியத்துவத்தின் காரணமாக பெறாமல், மாறாக ட்விட்டர் ப்ளூவுக்கு சந்தா கட்டி பெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
A few years ago, a friend sent me what I would later learn was a typically bizarre tweet by @njohncamm, asking if I knew who he was. No idea, but something bothered me – he almost shared a name with a very famous cardiologist, Professor John Camm
— Medlife Crisis (Rohin) (@MedCrisis) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Coincidence?
No...much stranger pic.twitter.com/ncvMRtjXPT
">A few years ago, a friend sent me what I would later learn was a typically bizarre tweet by @njohncamm, asking if I knew who he was. No idea, but something bothered me – he almost shared a name with a very famous cardiologist, Professor John Camm
— Medlife Crisis (Rohin) (@MedCrisis) March 9, 2023
Coincidence?
No...much stranger pic.twitter.com/ncvMRtjXPTA few years ago, a friend sent me what I would later learn was a typically bizarre tweet by @njohncamm, asking if I knew who he was. No idea, but something bothered me – he almost shared a name with a very famous cardiologist, Professor John Camm
— Medlife Crisis (Rohin) (@MedCrisis) March 9, 2023
Coincidence?
No...much stranger pic.twitter.com/ncvMRtjXPT
இங்கிலாந்தைச் சேர்ந்த இதய நோய் நிபுணரான டாக்டர் ரோஹின் ஃபிரான்சிஸ் என்பவர், இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டு, கணக்கின் செயல்பாடுகளுடன் தொடர்பில்லாத பேராசிரியரான ஜான் கேம் என்பவரின் பெயரைப் பயன்படுத்தியதைக் கண்டறிந்து இருந்தார்.
இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், யோகி ஆதித்யநாத் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடனான சந்திப்பிலான புகைப்படத்தை ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது. கணக்கு உரிமையாளரின் கால், முழங்கால் அளவிற்கு மட்டுமே உள்ளதால், இது கிராஃபிக்ஸ் முறையில் மாற்றி அமைக்கப்பட்ட படம் என்பதை உறுதியாக கூற முடிவதாக, டாக்டர் பிரான்சிஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் கலந்தாய்வில் 2020-21 முதல் முறைகேடு