ETV Bharat / bharat

அறிவியல்,தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநரான தமிழச்சி! - மூத்த அறிவியலாளர் நல்லதம்பி கலைச்செல்வி

கடந்த சனிக்கிழமை மூத்த அறிவியலாளரும் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கும் ந. கலைச்செல்வி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பை வழிநடத்தயிருக்கும் முதல் பெண்மணி ஆகிறார், கலைச்செல்வி

Etv Bharatஅறிவியல்  ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநரானார் கலைச்செல்வி

author img

By

Published : Aug 7, 2022, 3:46 PM IST

டெல்லி: அறிவியல்,தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநராக திருநெல்வேலியைச்சேர்ந்த மூத்த அறிவியலாளர் கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். கலைச்செல்வி, அவரது பள்ளி படிப்பை தமிழ் வழியில் பயின்றவர். தற்போது இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம், கலைச்செல்வி நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பை வழிநடத்தும் முதல் பெண்மணியாக பதவியேற்றுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி நேற்று (ஆகஸ்ட் 6) நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் சேகர் மாண்டே ஓய்வுபெற்றார். அதன் பின்னர் கலைச்செல்வி பதவியேற்றுள்ளார். பயோடெக்னாலஜி துறையின் செயலாளரான ராஜேஷ் கோகலேவிற்கு மாண்டேவின் ஓய்வுக்குப் பிறகு CSIRஇன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

மின் வேதியியல் குறித்து ஆய்வு:சிறப்பாக பணியாற்றமைக்கு கலைச்செல்வி சிஎஸ்ஐஆர் தரவரிசையில் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தார். கலைச்செல்வி 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சிப்பணியில் உள்ளார். இவரது ஆராய்ச்சியில் முதன்மையாக மின்வேதியியல் சக்தி அமைப்புகள் மற்றும் குறிப்பாக, மின்முனைப் பொருட்களின் மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு சாதனம் அமைப்பது குறித்து விளக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் பொருத்தத்திற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ராடு பொருட்களின் மின்வேதியியல் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

அவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் லித்தியம் - அயன் மற்றும் அதற்கு அப்பால் லித்தியம் பேட்டரிகள், சூப்பர் கேபாசிட்டர்கள் மற்றும் கழிவுகள் ஆகியவை கொண்டு இயக்கப்படும் மின்முனைகள், ஆற்றல் சேமிப்பு எலக்ட்ரோகேடலிடிக் பயன்பாடுகளுக்கான எலக்ட்ரோலைட்டுகள் ஆகியவை அடங்கும்.

அவர் தற்போது நடைமுறையில் சாத்தியமான சோடியம்-அயன்/லித்தியம்-சல்ஃபர் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கேபாசிட்டர்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். கலைச்செல்வி மின்சார இயக்கத்திற்கான தேசிய இயக்கத்திற்கும் முக்கியப்பங்காற்றியுள்ளார். அவர் 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆறு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.