ஜம்மு காஷ்மீரின் லாவேபோரா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
புறநகர்ப் பகுதியான லாவேபோராவில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் காவல் துறை இயக்குநர் விஜய் குமார் கூறுகையில், இத்தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
லாவேபோரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐவர் படுகாயம் அடைந்ததாகவும் அதில் இருவர் உயிரிழந்ததாகவும் மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.