ETV Bharat / bharat

ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு! - பாஜக சி பி ராதாகிருஷ்ணன்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.

ஜார்க்கண்ட் ஆளுநர்
ஜார்க்கண்ட் ஆளுநர்
author img

By

Published : Feb 18, 2023, 2:37 PM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பதவியேற்பு விழா இன்று (பிப்.18) நடைபெற்றது. ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மாநில அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், சபாநாயகர் ரவீந்திர நாத் மாடோ, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், "ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சியே எங்களின் பிரதான நோக்கம். ஜார்க்கண்டின் ஆளுநராக பதவியேற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அரசின் அனைத்து திட்டங்களும், மக்களை சென்றடையும் வகையில், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்" என கூறினார்.

கோவை மக்களவை தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன், ரமேஷ் பயாஸூக்கு பிறகு ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். அண்மையில் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் ஆளுநராக பணியாற்றி வரும் நிலையில், தற்போது சி.பி.ராதாகிருஷ்ணனும் ஆளுநராக பதவியேற்றுள்ளார்.

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் இந்தியா வருகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.