ETV Bharat / bharat

கோவிஷீல்டு செலுத்திய மகள் இறந்துவிட்டதாக தந்தை வழக்கு... சீரம் இந்தியா, பில்கேட்ஸ் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு...

கோவிஷீல்டு செலுத்தியதால் மகள் இறந்துவிட்டதாக தந்தை தொடர்ந்த வழக்கில் சீரம் இந்தியா, பில்கேட்ஸ் மற்றும் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bill Gates
Bill Gates
author img

By

Published : Sep 3, 2022, 10:13 PM IST

மும்பை: கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு தனது மகள் உயிரிழந்துவிட்டதாகவும், அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியும் திலீப் லுனாவத் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சீரம் இந்தியா நிறுவனம், பில்கேட்ஸ், மத்திய அரசு, மகாராஷ்ட்ரா அரசு, மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு வரும் 17ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சீரம் இந்தியா நிறுவனம், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பாஜக நிதி கொடுத்த வாங்கிங்க... எங்களுக்காக வந்து வேலைபாருங்க' - குஜராத்தில் பாஜகவினருக்கு அழைப்புவிடுத்த கெஜ்ரிவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.