உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 99 லட்சத்து 56 ஆயிரத்து 558ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 355 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1 லட்சத்து 44 ஆயிரத்து 451ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்து 89 ஆயிரத்து 740ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 95.31 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 33 ஆயிரத்து 291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 366 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவல்படி டிசம்பர் 16ஆம் தேதி வரை 15 கோடியே 78 லட்சத்து 05 ஆயிரத்து 240 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 960 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.