ETV Bharat / bharat

உருமாறிய கரோனா: மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு

மகாராஷ்டிராவில் அமலிலுள்ள தளர்வுகளுடன் கூடிய கரோனா ஊரடங்கினை ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் கரோனா ஊரடங்கு
மகாராஷ்ட்ராவில் கரோனா ஊரடங்கு
author img

By

Published : Dec 30, 2020, 5:02 PM IST

மும்பை: பிரிட்டனில் பரவத்தொடங்கிய உருமாறிய கரோனா தொற்று , இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் 20 பேருக்கு இந்த புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, ஹைதராபாத், பெங்களூரு, பூனே ஆகிய நகரங்களைச் சேர்ந்தோருக்கு இத்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மகாராஷ்டிராவில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய கரோனா ஊரடங்கினை ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், இரவு நேர ஊரடங்கிற்கு உத்தரவிடலாம் என அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. இந்த இரவு நேர ஊரடங்கு வரும் ஜனவரி 5ஆம் தேதிவரை அமலில் இருக்கும்.

இதுவரை அம்மாநிலத்தில் 19 லட்சத்து 25 ஆயிரத்து 66 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 18 லட்சத்து, 20 ஆயிரத்து 21 குணமடைந்தோரும், 49 ஆயிரத்து 373 உயிரிழந்தோரும் அடங்குவர். தற்போது வரை 55 ஆயிரத்து 672 பேர் இந்த தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் தலைமறைவான 565 பிரிட்டன் ரிட்டன்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.