இந்தியாவில் மேலும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 780 பேர் உயிரிழந்துள்ளனர். 61 ஆயிரத்து 899 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 642ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 19 லட்சத்து 13 ஆயிரத்து 292 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது மொத்தம் ஒன்பது லட்சத்து 76 ஆயிரத்து 608 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் ஒன்பது கோடியே 43 லட்சத்து 34 ஆயிரத்து 262 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தயக்கத்தை விடுங்க; தடுப்பூசி போட்டுக்கோங்க!' - ப. சிதம்பரம் ட்வீட்