இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 667 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 743ஆகப் பதிவாகியுள்ளது. 478 நபர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 493ஆகப் பதிவாகியுள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு மூன்று கோடியே 13 லட்சத்து 38 ஆயிரத்து 88 பேர் குணமடைந்துள்ளனர். நான்கு லட்சத்து 30 ஆயிரத்து 732 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய சூழலில் மூன்று லட்சத்து 87 ஆயிரத்து 673 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 49 கோடியே 17 லட்சத்து 577 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஆக. 13) மட்டும் 22 லட்சத்து 29 ஆயிரத்து 798 நபர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதுவரை சுமார் 53 கோடியே 61 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 63 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: கொடநாடு வழக்கில் புதிய திருப்பம்