ETV Bharat / bharat

11 ஆயிரம் பாதிப்புகள்...110 உயிரிழப்புகள்- இந்தியாவில் குறையும் கரோனா! - நாட்டில் கரோனா பாதிப்பு

டெல்லி: நேற்று ஒரேநாளில் மட்டும் 11 ஆயிரத்து 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சத்து 77 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி
டெல்லி
author img

By

Published : Feb 3, 2021, 3:04 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 39 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 110 ஆக உள்ளது.

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 596 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 631 ஆக உள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 2 லட்சத்துக்கும் குறைவாக தான் இருந்து வருகிறது. இதுவரை மொத்தமாக 19 கோடியே 84 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 7 லட்சத்து 21 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மியான்மரில் ராணுவ ஆட்சி: விமானங்கள் நுழைய தடை விதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.