இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்றின் பரவல் வேகமாக உள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலம், உச்ஹல் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மூன்று நாள்களுக்குப் பிறகு தாய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து அக்குழந்தை சிகிச்சைக்காக நியூ சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா பாதித்த பெண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஏப்ரல்.15) உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “எங்களிடம் குழந்தை வந்தபோதே சிறுநீரகம் பாதிப்படைந்தது. கோவிட்-19 காரணமாகக் குழந்தை உயிரிழந்துவிட்டது” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 15 நாள் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா