இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் பின்வருமாறு :
கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 850ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (டிச.26) ஒரேநாளில் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 622ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.44 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 61 ஆயிரத்து 538ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 95.82 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 690 பேர் தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதுவரை மொத்தமாக 16 கோடியே 81 லட்சம் இரண்டாயிரத்து 657 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் ஒன்பது லட்சத்து 43 ஆயிரத்து 368 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.