மத்தியப் பிரதேச மாநிலம் மன்ட்சவுர்(Mandsaur) நகரில் உள்ள மூன்று மதுபானக் கடைகள் தனது வாடிக்கையாளர்களுக்கு கோவிட்-19 கால சிறப்புச் சலுகையை அளித்துள்ளன.
அதன்படி, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மதுப்பிரியர்கள் தங்களின் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பித்தால் அவர்களுக்கு 10% டிஸ்கவுண்டுடன் மதுபானம் விநியோகிக்கப்படும் என மூன்று கடைகளும் அறிவித்துள்ளன.
இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் பாஜக எம்.எல்.ஏ யஷ்பால் சிங் சிசோடியா(Yashpal Singh Sisodiya) எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு அரசு துணை போவதாக ஆகிவிடும் என அவர் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதுவரை எட்டு கோடியே 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக தடுப்பூசி முகாம்களை அரசு நடத்திவரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் விதமாக மாவட்ட நிர்வாகங்கள் இதுபோன்ற விநோதமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
இதையும் படிங்க: மம்தா கட்சியில் ஐக்கியமான முன்னாள் ஐக்கிய ஜனதாதளம் எம்.பி