ETV Bharat / bharat

உள்ளாட்சி தேர்தல்: ஆந்திர அரசு கோரிக்கை நிராகரிப்பு - ஆந்திர பிரதேசம் தேர்தல் செய்தி

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை ஆந்திர அரசு நிறுத்தி வைக்க முடியாது என அம்மாநில உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Andhra Pradesh High Court
Andhra Pradesh High Court
author img

By

Published : Dec 8, 2020, 7:01 PM IST

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கு இடையே முரண்பட்ட போக்கு நிலவிவருகிறது.

வரும் பிப்ரவரி மாதம் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து ராஜ் துறையின் தலைமை செயலர் கோபால கிருஷ்ணா திவேதி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில அரசுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் இதை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் ஆணையம் சர்பாக ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பிரிவு 243இன் படி தேர்தல் நடத்த முழு அதிகாரம் உள்ளதாகக் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போதைய சூழலில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்திவைக்க மாநில அரசுக்கு உரிமையில்லை எனத் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: இரு நாட்டு உறவு குறித்து கத்தார் நாட்டு மன்னருடன் மோடி பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.