ETV Bharat / bharat

நாய் மீது தாக்குதல்-தம்பதி மீது வழக்குப்பதிவு - நாயை தாக்கிய தம்பதி மீது வழக்குட

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நாயை தாக்கிய தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாய் மீது தாக்குதல், தம்பதி மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Nov 18, 2022, 10:09 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் தோட்பூரை சேர்ந்த விக்ரம்-நீது தம்பதி மீது அதே பகுதியில் நாயை தாக்கியதாக வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்பூர் போலீசார் தரப்பில், இந்த தம்பதி நாயை அடித்து அருகில் உள்ள குப்பை தொட்டியில் வீசியதாக ஜீவ் தயா அறக்கட்டளையின் செயலாளரான ஆஷா சிசோடியா புகார் அளித்தார். அதனடிப்படையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 429 மற்றும் பிரிவு 11ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆஷா சிசோடியா கூறுகையில், தோட்பூரை சேர்ந்த நாயின் உரிமையாளர் அளித்த தகவலின் விக்ரம், நீது தம்பதி மீது புகார் அளித்தேன். அவர்கள் நாயை இரக்கமின்றி தாக்கியது மட்டுமல்லாமல். மூட்டையில் கட்டி குப்பைத்தொட்டியில் வீசிச்சென்றுள்ளனர். அந்த நாயை நாங்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு நாயின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பொதுவாக நாய் மீது பலருக்கு கருணையில்லை. ஒரு உயிருள்ள விலங்கு என்று மதிப்பது கிடையாது. இந்த எண்ணம் மாறவேண்டும் எனத் தெரிவித்தார்.'

இதையும் படிங்க: பூல் முகமது கொலை வழக்கு: 11 ஆண்டுகளுக்கு பின் 30 பேருக்கு ஆயுள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.