சென்னை: நள்ளிரவு 12.07 மணிக்கு 'ஒன்வெப்' நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களைச் சுமந்தவாறு ஜிஎஸ்எல்வி மாக்-3 வகையைச் சேர்ந்த எல்விஎம்3 எம்2 (GSLV Mk III - LVM3 M2)ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன் ஏவுதலுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது.எல்விஎம்3 எம்2 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 644 டன் எடையும் கொண்ட அதிக எடை கொண்ட ராக்கெட் ஆகும். இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் துறைமுகத்தில் உள்ள முதல் இரண்டாவது தளத்தில் இருந்து இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் இந்தியாவின் புவிசார் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஜியோ சின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவு வாகனம் (ஜிஎஸ்எல்வி) என்று பெயரிடப்பட்டது. ஜிஎஸ்எல்வி மாக்-3 என்பது மூன்றாம் தலைமுறை ராக்கெட்டைக் குறிக்கிறது. மேலும் ராக்கெட் லோ எர்த் ஆர்பிட்டில் (LEO) OneWeb செயற்கைக்கோள்களை சுற்றி வருவதால், ISRO GSLV MkIII ஐ LVM3 (Launch Vehicle MkIII) என மறுபெயரிட்டுள்ளது.
36 சிறிய பிராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களானது ஒன்வெப், இந்தியா பார்தி குளோபல் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்தின் கூட்டு முயற்சியாகும். செயற்கைக்கோள் நிறுவனம் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) சுமார் 650 செயற்கைக்கோள்களின் தொகுப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 345 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுண்ணுயிரித் தொடர்புகள் குறித்து ஆய்வு ..!