ETV Bharat / bharat

புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்போட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி: முகாமைத் தொடங்கி வைத்த தமிழிசை - corona vaccination camp initiatedby Tamilisai Soundarajan

புதுச்சேரி: இன்று (மே.20) முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கிவைத்தார்.

புதுச்சேரியில் தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்த தமிழிசை

author img

By

Published : May 20, 2021, 2:45 PM IST

புதுச்சேரியில் இன்று (மே.20) முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு, நேற்று (மே.19) அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டது.

இந்ந நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிமேட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்த தமிழிசை
புதுச்சேரியில் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த தமிழிசை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி முழுவதும் இதுவரை 1,600 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர். கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று 400 பேரும், நாளைக்காக 400 பேரும் பதிவு செய்துள்ளனர்.
இளைஞர்கள், வயதானவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து உங்களது வீட்டில், அருகில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் கரோனா தடுப்பூசி போட வலியுறுத்த வேண்டும்.
தடுப்பூசி போட்டதால் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிவிடமுடியாது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் இன்னும் எத்தனை அலை வந்தாலும் பாதிப்பு ஏற்படாது. மக்கள் பணியாற்றுபவர்கள் இதுகுறித்து மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.