புதுச்சேரியில் கரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மதுபான கடைகள் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக தளர்வுகளுடன் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. அதில் மதுபான விலைகளில் கரோனா விற்பனை வரிவிதிக்கப்பட்டது. இந்த வரியால் மதுபானங்கள் விலை இருமடங்கு உயர்ந்தன. இதனால் வெளிமாநில மதுப்பிரியர்களின் வருகை குறைந்தது.
இந்த நிலையில், மதுபானங்கள் மீதான கரோனா வரி நீக்கப்பட்டு இன்று முதல் விலை குறைத்து விற்பனை செய்ய கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் மதுப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.