இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, மகாராஷ்டிராவில் தீவிரமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அங்கு இரவு நேர ஊரடங்கை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியும் புதிய கட்டுப்பாட்டை தற்போது விதித்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து டெல்லி வருபவர்கள் அனைவரும் 72 மணிநேரத்துக்கு முன்னதாக தங்களை கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இல்லையென்றால் வரும் நபர்கள் 14 நாள் குவாரன்டைனுக்கு அனுப்பப்படுவார்கள் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 தேதி வரை அமலில் இருக்கும் எனவும், பேருந்து, ரயில், விமானம் என அனைத்து மார்க்கங்களிலும் வருபவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: கோட்டையைத் தக்கவைத்த பாஜக, காங்கிரஸ் படுதோல்வி, என்ட்ரி கொடுத்த ஆம் ஆத்மி