ETV Bharat / bharat

கரோனா மாதா கோயில் - படையெடுக்கும் மக்கள்! - corona mata temple

அண்மையில் கரோனா தேவி சிலை அமைக்கப்பட்ட நிலையில், அதை மிஞ்சும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனா மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது.

corona-mata-temple-established-in-pratapgarh
உ.பி.யில் கரோனா மாதா கோயிலுக்கு படையெடுக்கும் மக்கள்!
author img

By

Published : Jun 12, 2021, 7:28 PM IST

Updated : Jun 12, 2021, 7:38 PM IST

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் பார்த்தபாகர் மாவட்டத்தில் உள்ள சுக்லாப்பூர் கிராமத்தில், கரோனா மாதா கோயிலை அவ்வூர் மக்கள் அமைத்துள்ளனர். இதுதொடர்பாக அவ்வூர் வாசிகள் கூறுகையில், ஆயிரக்கணக்கான மக்கள் கரோனா தொற்றினால் உயிரிழந்து வருவதை கண்டபின் கடவுளை வணங்குவது மக்களுக்கு அமைதியைத் தரும் என்று நம்பினோம். அதனடிப்படையில் நன்கொடை பெற்று வேப்பமரத்தின் அடியில் இந்த கரோனா மாதா கோயிலை அமைத்துளளோம்" என்கின்றனர்.

கரோனா மாதா கோயில்

சுக்லாப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மாதா கோயிலில், முகக்கவசமும் அணிந்த நிலையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அக்கோயிலின் சுவரில், 'சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்', 'கைகளைகழுவுங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

பிளேக் மாரியம்மன் கோயில்

பொதுவாக, பேரிடர்கள், தொற்று நோய்கள் பரவும் சமயத்தில் அதன்பெயரில் கிராமப்புறங்களில் தெய்வங்கள் வணங்கப்படும். அண்மையில்கூட, கோவையில் கரோனா தேவி சிலை அமைக்கப்பட்டு மக்களால் வணங்கப்பட்டது.

corona-mata-temple-established-in-pratapgarh
கரோனா மாதா கோயிலில் பக்தர்கள்

இது பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது. இருப்பினும், அதே கோவையில், பிளேக் நோய் கொடூரமாக பரவிவந்த 1900களில் பிளேக் மாரியம்மன் கோயில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆத்தா வந்துட்டா..' கரோனாவின் ஆட்சிக்கு மத்தியில் கரோனா தேவியின் ஆசி

Last Updated : Jun 12, 2021, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.