புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் ஆறு நபர்களுக்கும், காரைக்காலில் ஒருவரும், மாஹேவில் ஒருவரும் என மொத்தம் எட்டு நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாநிலத்தில் தற்போது 250 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 968 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 93 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி முதல் தவணை ஏழு லட்சத்து 76 ஆயிரத்து 835 பேரும், இரண்டாம் தவணை நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 132 பேரும் செலுத்தியுள்ளனர். மொத்தமாக 12 லட்சத்து 67 ஆயிரத்து 967 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : அச்சுறுத்தும் ஒமைக்ரான்; இன்றைய கரோனா பாதிப்பு