புதுச்சேரி: தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், Puducherry நகரப்பகுதிகளான உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, ரெயின்போ நகர், ரெட்டியார்பாளையம், மூலகுளம் மற்றும் கிராமப்பகுதிகளான வில்லியனூர், திருக்கனூர், உருவையாறு, பாகூர் உள்ளிட்டப் பகுதிகள் என மாநிலம் முழுவதும் இரவு முதலே கன மழை பெய்து வருகிறது.
இந்தத் தொடர் மழையின் காரணமாக புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி புதுவையில் 82.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: Chengalpattu Flood: மழை நீரில் தத்தளிக்கும் கலால் காவல் நிலையம்