ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுக அல்லது பதவி விலகுக - காங்கிரஸ் காட்டம் - ‘கிசான் அதிகார திவாஸ்

டெல்லி : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுக அல்லது பதவி விலகுக என்ற முழக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் முற்றுகையிடப்படுமென அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஜCongress to stage protest outside all Governor Houses across the country on January 15
ஜன.15ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடப்படும் - காங்கிரஸ்
author img

By

Published : Jan 9, 2021, 9:35 PM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகச் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, உழவர்களுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 45 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வை இன்றுவரை எட்ட முடியவில்லை.

நாடு முழுவதும் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களங்களில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெறு அல்லது பதவி விலகு என்ற முழக்கத்தை முன்வைத்து, ஜனவரி 15ஆம் தேதி மாநில மற்றும் மாவட்ட அளவில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

Congress to stage protest outside all Governor Houses across the country on January 15
ஜன.15ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் முற்றுகையிடப்படும் - காங்கிரஸ்

அகில இந்திய காங்கிரசின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (ஜன. 09) நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ‘கிசான் அதிகார திவாஸ்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அனைத்து மாநில/யூனிய பிரதேசங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளை காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிட முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தவிர, அதே நாளில் 'விவசாயிகளுக்காகப் பேசுங்கள்' என்ற சமூக வலைதளப் பரப்புரையையும் காங்கிரஸ் தொடங்கவிருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க : ‘மக்களாட்சித் தத்துவத்தை அவமதித்துள்ள ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசுவேன்’ - ராம்தாஸ் அத்வாலே

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.