குஜராத் : 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் 37 வேட்பாளர்கள் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. பயாத் தொகுதியில் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவின் மகன் மகேந்திரசிங் வகேலாவை அக்கட்சி களம் இறக்கியுள்ளது.
சனந்த் தொகுதியில் ரமேஷ் கோலி, கம்பத்தில் சிராக் அரவிந்த்பாய் படேல், தாஹோத் (எஸ்டி)தொகுதியில் ஹர்ஷத்பாய் நினாமா உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திர தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அவர்களின் பட்டியலை அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்க்கே உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ் முயன்று வருகிறது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியின் சவாலையும் அக்கட்சி எதிர்கொள்வது குறப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "பாஜக அல்ல, ஆம்ஆத்மிதான் காரணம்..." - வாபஸ் குறித்து ஆம்ஆத்மி வேட்பாளர் திட்டவட்டம்!