ETV Bharat / bharat

காங்கிரஸ் காரிய கமிட்டியில் அதிரடி மாற்றம் - சசி தரூர், சச்சின் பைலட் சேர்ப்பு! - சச்சின் பைலட்

காங்கிரஸ் காரிய கமிட்டியில் பல்வேறு மாற்றங்கள் செய்து புதிய காரிய கமிட்டி குறித்த அறிவிப்பை அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். இதில், சசி தரூர், சச்சின் பைலட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Cong president Kharge
கார்கே
author img

By

Published : Aug 20, 2023, 7:00 PM IST

டெல்லி: 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதையடுத்து, தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். அதன் பிறகு, வலிமையான தலைமை இல்லாததால் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. பலரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை மீட்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டனர். ராகுல்காந்தி நாடு முழுவதும் பாரத் ஜடோ யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டு, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பலரும் மீண்டும் கட்சியில் இணையத் தொடங்கினர். அதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினரிடையே இருந்த உட்கட்சிப் பூசலை காங்கிரஸ் தலைமை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. அதன் விளைவாக கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 'இந்தியா' என்ற கூட்டணியை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. இக்கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளன. இக்கூட்டணி மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டிக் குழுவை மாற்றியமைத்து மல்லிகார்ஜுன கார்கே இன்று(ஆகஸ்ட் 20) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 39 உறுப்பினர்கள், 32 நிரந்தர அழைப்பாளர்கள், 13 சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட 84 பேர் இடம்பெற்றுள்ளனர். 50 வயதுக்குட்பட்ட இளம் தலைவர்கள், 15 பெண்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் 39 வழக்கமான உறுப்பினர்கள் பட்டியலில் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கேவை எதிர்த்துப் போட்டியிட்ட எம்பி சசி தரூரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், ஆனந்த் ஷர்மா, மணீஷ் திவாரி, திக்விஜய சிங், சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் காங்கிரஸ் காரிய கமிட்டியில் இடம் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு சோனியா காந்தி தலைமையில் மாற்றப்பட்டது. அதன் பிறகு தற்போது கார்கே தலைமையில் மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுவது பொய்" - ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.