ETV Bharat / bharat

'மக்களின் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்' - ராகுல் காந்தி - ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி

ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவிய நிலையில், மக்களின் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Congress leader Rahul Gandhi after the party loses all five states

author img

By

Published : Mar 10, 2022, 5:45 PM IST

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட, பஞ்சாப், கோவா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) நடந்துவருகிறது. இதில் பஞ்சாபைத் தவிர்த்து, மற்ற மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பழமையும், புகழும் வாய்ந்த கட்சியான காங்கிரஸ், தொடர் தோல்விகளால் தத்தளித்துவருவது அக்கட்சியினர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர்கள் சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பதவிவகித்துவருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்றிவிட்டது. இந்தத் தோல்வி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களின் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

  • Humbly accept the people’s verdict. Best wishes to those who have won the mandate.

    My gratitude to all Congress workers and volunteers for their hard work and dedication.

    We will learn from this and keep working for the interests of the people of India.

    — Rahul Gandhi (@RahulGandhi) March 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அவர்களது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் எனது நன்றிகள். தோல்வியிலிருந்து பாடம் கற்று, நாட்டு மக்களின் நலன்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உத்தரகாண்ட் தேர்தல்: தொடர்ந்த வரலாற்றை மாற்றிய பாஜக..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.