ETV Bharat / bharat

எனக்கு தகுதி இல்லையா சோனியா ஜி... புலம்பும் நக்மா! - Nagma

“சோனியா காந்தி அவர்களே... அன்று நீங்கள் எனக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? என ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார் நடிகை நக்மா.

nagma
nagma
author img

By

Published : May 30, 2022, 12:28 PM IST

புதுடெல்லி: இரு தசாப்தங்களுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நக்மா. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்து முன்னணி நட்சத்திர பேச்சாளராக வலம்வந்தார். பல்வேறு மாநில சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் காங்கிரஸிற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து இவருக்கு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டன. அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் ஜம்மு- காஷ்மீர், லடாக், புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்வானவர்களுக்கு நடிகை நக்மா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை நக்மா அதிருப்தி: தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆதங்கத்தின்பால் சில கேள்விகளையும் கேட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களைக்கு தேர்வானவர்களின் பட்டியலை பகிர்ந்துள்ள நக்மா, “மாநிலங்களவைக்கு தேர்வான அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “2003ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது சோனியா காந்தி அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மாநிலங்களவை சீட் தருவதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக எனக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஏன் எனக்கு அந்தத் தகுதி இல்லையா? எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • SoniaJi our Congress president had personally committed to accommodating me in RS in 2003/04 whn I joined Congressparty on her behest we weren’t in power thn.Since then it’s been 18Yrs they dint find an opportunity Mr Imran is accommodated in RS frm Maha I ask am I less deserving

    — Nagma (@nagma_morarji) May 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காங்கிரஸில் மாநிலங்களவை சீட்: ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சத்தீஸ்கரில் இருந்து ராஜிவ் சுக்லா, ரன்ஜித் ரன்ஜன், ஹரியானாவில் இருந்து அஜய் மக்கான், கர்நாடகாவில் இருந்து ஜெய்ராம் ரமேஷ், மத்தியப் பிரதேசத்தில் இருந்து விவேக் தன்கா, மகாராஷ்டிராவில் இருந்து இம்ரான் பிரதாப் கார்கி. ராஜஸ்தானில் இருந்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ப. சிதம்பரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Congress leader Nagma reacts after being denied Rajya Sabha sea
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நக்மா

இதையும் படிங்க: தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ப.சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.