விவசாயிகளின் போராட்டத்தினால் முதலில் திக்குமுக்காடிப்போன கட்சிகளில் ஒன்று சிரோமணி அகாலி தளம். காங்கிரஸ் தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான கேப்டன் அமரீந்தர் சிங் அதிரடிச் செயல்களில் ஈடுபடுவதில் வல்லமை படைத்தவர்.
சிரோமணி அகாலி தளம், பாஜக கூட்டணியிலிருந்து விலகியதோடு, மட்டுமல்லாமல் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவை அச்சுறுத்தினர்.
காங்கிரஸ் கட்சிக்கு விவசாயிகள் போராட்டத்தினால் முதல் அரசியல் லாபம் கிடைத்திருக்கிறது. தற்போது பஞ்சாபில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எட்டில், ஏழு மாநகராட்சிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றி மூன்று வேளாண் சட்டங்கள் மட்டுமே முக்கியக் காரணம்.
காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், அது சுவைத்த ஆகச் சிறந்த வெற்றி என்பது பதிண்டாவில்தான். இங்கு காங்கிரஸ் 53 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகாரத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. பஞ்சாபில் கனிந்த இந்த வெற்றி அண்டை மாநிலமான அரியானாவிலும் நிச்சயமாக எதிரொலிக்கும்.
அரியானாவில் தேர்தலுக்குப் பின் பாஜக வைத்த கூட்டணி மனோகர் லால் கட்டாரை முதலமைச்சராக்கி அதிகாரத்தில் வைத்திருக்கிறது. எல்லைக்கு அப்பால் நிகழ்ந்த காங்கிரசின் வெற்றியால், அரியானா கூட்டணியில் விரிசல் எழக் கூடும். இந்த வெற்றி டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு மேலும் வலுசேர்க்கும்.
விவசாயிகளின் தலைவரான ராகேஷ் டிகைட்டின் கண்ணீர் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாட் இன மக்களை ஒன்றுசேர்த்தாலும், அது பாஜகவைப் பயமுறுத்தும் பிரமாண்டமானதோர் அரசியல் இயக்கமாக மாறிவிடவில்லை; தற்போதுவரை விவசாயிகளின் போராட்டத்திற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரிதாக ஆதரவு இல்லை.
இருப்பினும் நம்மை அசைபோட வைக்கும் கேள்வி: விவசாயிகள் போராட்டத்தினால் கிடைத்த தேர்தல் தோல்வியை பாஜக உணர வாய்ப்புள்ளதா? ஆனால், மத்திய அரசு தெளிவாகவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று கூறிவிட்டது. பாஜகதான் எடுத்த முடிவில் பின்வாங்காத பிடிவாதப் போக்குதான் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த முட்டுச்சந்து நிலவரத்திற்கு அரசியல் ரீதியாக பாஜக பெரியதோர் விலை கொடுக்க வேண்டி வரலாம்.
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜக வெறும் இளைய பங்காளிதான். ஆனால் தேர்தலில் முன்வைக்கப்பட்ட பரப்புரை விவாதமே வேளாண்மைச் சட்டங்கள்தான் என்பதை காவிகள் மறந்துவிடக் கூடாது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் பாஜக சிறிய போட்டியாளர்தான். ஆனால் மேற்கு வங்காளத்திலும், அஸ்ஸாமிலும் பெரும் முதலைகளாய் உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங் தனது சுயபலத்தின் அடிப்படையிலே தலைவர். பஞ்சாபில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எழுப்பியிருக்கும் வெற்றிமுழக்க வாசகம் ‘2022-லே கேப்டன்.’ இந்த ஸ்லோகன் அவரது கட்சியை அடித்தட்டு மக்களின் செல்வாக்கைப் பெறவைத்துள்ளது.
குஜராத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பாஜகவுக்குச் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். இந்தி பேசும் மாநிலங்களில் ஏற்படுத்திய விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் இன்னும் ஆய்வுசெய்யப்படவில்லை. இனிவரும் நாளில் இன்னும் நிறைய போராட்டங்கள் காத்திருக்கின்றன; எல்லாம் அரசின் கொள்கை மாற்றங்கள் சம்பந்தப்பட்டவை.
பஞ்சாபின் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு ஊட்டச் சத்தாகுமா? அதன் வெற்றி தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மாநிலங்களில் தேர்தல் கணக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா? இந்த வினாக்களுக்கான விடைகள் அப்பால் இருக்கின்றன; சில மாதங்களுக்கு அப்பால்!
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை