ETV Bharat / bharat

Karnataka Election: கர்நாடக தேர்தல் வெற்றி.. பாப் சாங் போட்டு தெறிக்கவிட்ட காங்கிரஸ்.. தலைவர்கள் ரியாக்‌ஷன் என்ன? - congress celebrations

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிப்பதால், அக்கட்சி தொண்டர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

Karnataka Election: முன்னிலையை டெல்லியில் கொண்டாடும் காங்கிரஸ்

author img

By

Published : May 13, 2023, 12:08 PM IST

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 224 தொகுதிகளுக்கும் கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என மும்முனை போட்டி நிலவும் கர்நாடகாவில், இன்று (மே 13) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 117 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து அடுத்தடுத்த இடங்களில் பாஜக 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 25, சுயேட்சைகள் 5, கல்யாண ராஜ்ய பிரகதி பாக்‌ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சர்வோதயா கர்நாடகா பாக்‌ஷா ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

மேலும், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை கொண்ட எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதால், அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமாக பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையகத்தில் குவிந்த தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திலும் அக்கட்சியின் தொண்டர்கள் தலைவர்களின் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • #WATCH | Celebratory mood at Congress office in Bengaluru as party consolidates its lead around 119 seats in initial trends in Karnataka election results pic.twitter.com/Xlk9aQqWeF

    — ANI (@ANI) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், கனகாபுரா தொகுதி வேட்பாளருமான டிகே சிவகுமாரின் பெங்களூரு வீட்டிலும் தொண்டர்கள் குவிந்துள்ளனர். அங்கும், அவர்கள் லட்டு போன்ற இனிப்புகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், “நாங்கள் தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெறுவோம். ‘40 சதவீத கமிஷன் அரசு’ என்ற ஸ்லோகனை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது பாஜகவை எதிர்கொள்ள முக்கிய காரணியாக பயன்படுத்தப்பட்டது. இதனை மக்கள் ஏற்று, எங்களுக்கு பெரும்பான்மை மிகுந்த வெற்றியை கொடுத்துள்ளனர்” என தெரிவித்தார். அதேநேரம், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கமல்நாத், “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நேரத்தில், பாஜக பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தொடங்கி இருக்கும்” என்றார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா தொண்டர்களிடம் ‘தம்ப்ஸ் அப்’ காட்டி வெற்றி நிலையை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நான் வெல்ல முடியாதவன். நான் மிகவும் நம்விக்கை உடன் இருக்கிறேன். ஆம், என்னால் இதனை தடுக்க முடியாது” என பதிவிட்டுள்ளனர். அதேபோல், காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள ஜகு கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் சாமி தரிசனம் செய்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹூப்பளியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து தற்போது ஷிகாவோன் தொகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் பசவராஜ் பொம்மை ஆலோசனையில் உள்ளார்.

அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் முன்னாள் மூத்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “7 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட நாட்கள் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்ரா, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என கூறினார்.

இதையும் படிங்க: Siddaramaiah: "எங்க அப்பா தான் சிஎம்" - துண்டு போட்ட சித்தராமையா மகன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.