கேரளாவில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சியான யு.டி.எஃப். வேட்பாளருமான நிலம்பூர் வி.வி. பிரகாஷ் இன்று காலை 5 மணி அளவில் மாரடைப்பால் காலமானார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
56 வயதான இவர், மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இறப்பிற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். "வி.வி. பிரகாஷ் அகால மறைவு மிகவும் துயரமானது. காங்கிரசின் நேர்மையான, கடின உழைப்பாளி உறுப்பினராக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று ராகுல் ட்வீட் செய்துள்ளார்.
வி.வி. பிரகாஷின் மறைவுக்குப் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது வருத்தத்தைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளுக்கு ரிலையன்ஸ் வழங்கும் சலுகை!