ஹுப்ளி : கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹுப்ளி தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியை தழுவினார். 6 முறை எம்எல்ஏவாகவும், திடீர் முதலமைச்சர் என கர்நாடகாவை ஆண்ட ஜெகதீஷ் ஷெட்டரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி வருகிறது.
கர்நாடக அரசியலை சக்திகளில் ஒன்றாக கருதப்பட்ட லிங்காயத் சமூக மக்களின் அடையாளமாக அறியப்பட்ட ஜெகதீஷ் ஷெட்டர் குடும்ப வழியாக அரசியலில் கோலோச்சி வருகின்றனர். பாஜகவின் முக்கியத் தலைவராகவும், தீவிர ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவும் ஜெதீஷ் ஷெட்டர் காணப்படார்.
1994 ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பாஜகவின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். 2008, 2013, 2018 என தொடர்ந்து 3 முறை பாஜக சார்பில் ஹூப்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியின் அடையாளமாக காணப்பட்டார்.
இதில் 2008 ஆம் ஆண்டு சபாநாயகர், எடியூரப்பா மற்றும் சதானந்த கவுடா ஆகிய இரு முதலமைச்சர்களின் அமைச்சரவையில் அமைச்சர் பதவி என பாஜகவின் முகமாகவே ஜெகதீஷ் ஷெட்டர் காணப்பட்டார். அதேநேரம், கர்நாடக அரசியலில் நிலவிய திடீர் நெடுக்கடி காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2013 வரை கர்நாடகாவின் 15வது முதலமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.
இப்படி பாஜகவின் முதன்மையானவர்களின் பட்டியலில் முக்கியப் புள்ளியாக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், 2023 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தொகுதியில் சீட்டு வழங்கப்படாததை அடுத்து பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அவருக்கு ஹூப்ளி தர்வாத் மத்திய தொகுதியை காங்கிரஸ் கட்சி ஒதுக்கியது.
தேர்தல் பரப்புரைகளில் ஜெகதீஷ் ஷெட்டர் தீவிரமாக ஈடுபட்ட போதிலும், அவருக்கு வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கனிகை ஏறத்தாழ 64 ஆயிரத்து 910 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஜெகதீஷ் ஷெட்டர் 29 ஆயிரத்து 340 வாக்குகள் மட்டுமே பெற்று ஏறத்தாழ 30 ஆயிரம் வாக்குகள் பின்தங்கிய நிலையில் தோல்வியை தழுவினார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தது, நீண்ட கால ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினராக இருந்து விட்டு அரசியலுக்காக திடீரென கட்சித் தாவியதே மக்களுக்கு, ஜெகதீஷ் ஷெட்டர் மீது அதிருப்தி ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஏறத்தாழ 6 முறை எம்.எல்.ஏ., கர்நாடக முதலமைச்சர் என முக்கிய பொறுப்புகளில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்ளி தர்வாத் மத்திய தொகுதியில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் ஜெகதீஷ் ஷெட்டரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாக தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Karnataka Result: 15 அமைச்சர்கள் தோல்வி முகம்.. கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு!