ETV Bharat / bharat

கர்நாடக முதலமைச்சர் தேர்வு - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம்! - காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

கர்நாடக முதலமைச்சர் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்து உள்ளது.

Congress
Congress
author img

By

Published : May 13, 2023, 8:06 PM IST

பெங்களூரு : 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இன்று (மே. 13) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களிலும், பாஜக 62 இடங்களிலும் வெற்றி பெற்றன. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களையும் நாளை (மே. 14) பெங்களூரு வருமாறு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோரிடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி நிலவுகிறது.

இருவரின் பெயரும் காங்கிரஸ் முதலமைச்சர் பதவிக்கான ரேஸில் உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என சொல்லப்படுகிறது. முன்னதாக மக்களின் பேராதரவுடன் தனது தந்தை சித்தராமையா முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என அவரது மகன் யாதிந்திரா தெரிவித்துள்ளார்.

இதற்கு உடனடியாக பதில் கொடுத்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு தான் செய்யும் என்று கூறினார். முன்னதாக மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா 130க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என கணித்தது நிறைவேறி இருப்பதாகக் கூறினார்.

மேலும், நாளை (மே. 14) காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் கனகபுரா தொகுதியில் தேர்தல் வெற்றிக்குப் பின் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், உணர்ச்சிப் பெருக்குடன் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரிடம் உறுதி அளித்ததாகக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், முதலமைச்சர் தேர்வுக்கான செயல்முறைகள் நடைபெற்று வருவதாகவும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும்; கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் என்பதை உயர்மட்டக் குழு முடிவு செய்யும் என்றும் கூறினார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். இதனிடையே கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும், தேர்தல் முடிவுகளை விரிவாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார். பாஜக கடுமையாக உழைத்தபோதிலும் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்றார்.

இதையும் படிங்க : Siddaramaiah: "எங்க அப்பா தான் சிஎம்" - துண்டு போட்ட சித்தராமையா மகன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.